30th December 2019 15:09:18 Hours
கடற்கரை பிரதேசம் மாசடைவதை தடுக்கும் முகமாக இராணுவத்தினரால் கடற்கரை பிரதேசத்தை துப்பரவு செய்யும் பணிகள் நாடாளவியல் ரீதியாக ஆரம்பிக்கப்பட்டன. இதில் முதல் அங்கமாக மோதரை காக்கை தீவு கடற்கரை பகுதிகளில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது பங்களிப்புடன் இம் மாதம் (29) ஆம் திகதி சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ( இந்த செய்தியானது இராணுவ இணையதள முதல் பக்கத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.)
யாழ் குடா நாட்டில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் இராணுவ அதிகாரிகள் 40 பேரதும், 1035 படையினரது பங்களிப்புடன் பண்ணையிலிருந்து சுன்டிகுளம் வரையான கடலோர பகுதிகளில் இம் மாதம் (29) ஆம் திகதி துப்பரவு பணிகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டன.
இந்த துப்பரவு பணிகள் 51, 52 மற்றும் 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதிகளின் தலைமையில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றன.
மேலும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 700 இராணுவ அங்கத்தவரது பங்களிப்புடன் முல்லைத்தீவு கடலோர பகுதிகளில் 59, 68 மற்றும் 64 ஆவது படைப் பிரிவின் படையினரது பங்களிப்புடன் துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் கொக்கிலாய் கடலோர பகுதிகளில் 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் W.L.P.W பெரேரா அவர்களது தலைமையில் கட்டளை தளபதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் படையினரது பங்களிப்புடன் இந்த சிரமதான பணிகள் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். jordan Sneakers | UOMO, SCARPE