Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th July 2020 17:20:30 Hours

இராணுவத்தினரால் உலருணவு பொருட்கள் வழங்கி வைப்பு

புத்தளத்திலுள்ள முஸ்லீம் ஒத்துழைப்பு அமைப்பின் நிதியனுசரனையுடன் 54 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் சிறுவர் மற்றும் முதியோர் இல்லத்திற்கு உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மன்னாரிலுள்ள அன்னை இல்லம், புனித சூசையப்பர் வாஸ் சிறுவர் இல்லம் மற்றும் சந்தோனம் முதியோர் இல்லத்திற்கு 50 கிலோ கோதுமை மா, 20 கிலோ சிவப்பு அரிசி, 14 கிலோ பிஸ்கட், 4 கிலோ தேயிலை உறைகள் உள்ளடங்கிய பொருட்கள் இராணுவத்தினரால் இம் மாதம் (23) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

இந்த பணிகள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்திரஜித் பண்டார அவர்களின் வழிக்காட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. Running sneakers | Air Jordan