29th March 2019 18:12:13 Hours
மோட்டார் வாகன பதிவாளர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் மூலம் பயிற்ச்சி பெற்ற 56 இராணுவ படையினரைக் கொண்டு இராணுவ வழங்கல்; மற்றும் போக்குவரத்து பணியகமானது இராணுவ வாகனங்களுக்கான வாகன உமிழ்வு சோதனை மேற்கொள்வதற்கான புதிய முயற்சியினை எடுத்துவருகின்றது.
அதன்படி தனியார் நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த வாகன உமிழ்வு சோதனைக்கான கொடுப்பணவு செலவை குறைத்து கொள்வதற்கானஇப் புதிய அணுகுமுறை திட்டமானது,இராணுவ வழங்கல் மற்றும் போக்குவரத்து பணியகத்தின் பணிப்பாளர் கேர்ணல் ஹிரோஷ் வனிகசேகர அவர்களால் தொடங்கப்பட்டன.
இந்த நடைமுறை பயிற்சியை பெற்ற 56 படையினர்களால் இலங்கை இராணுவ மின் இயந்திர பொறியியளாளர்கள் பட்டறை,சுதந்திரசதுக்கப் பிரிவு, தலைமையகங்கள், படைப் பிரிவுகள், மற்றும் உருவாக்க நிலைகள் போன்ற இடங்களில் இராணுவ வாகனங்களுக்கானஉமிழ்வு பரிசோதனை ஆய்வுகள் முன்னெடுக்க தொடங்கியுள்ளன.
வர்த்தமானி அறிவிப்பின்பிரகாரம்,சுற்றுபுறச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தை முன்னிட்டு நாட்டில் செயல்படும் அனைத்து வாகனங்களுக்கான வாகன உமிழ்வு பரிசோதனை சான்றிதல் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போது அனைத்து இராணுவ வாகனங்களுக்கும் அத்தகைய உமிழ்வு சோதனைகளை இலவசமாக குறித்த இடங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. jordan Sneakers | Men's Sneakers