Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th January 2020 22:23:55 Hours

இராணுவத்தினரது உதவியுடன் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

முருசமோட்டை நவஜீவன கிறிஸ்தவ ஆலயத்தில் வைத்து வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு 57, 573 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கடந்த மாதம் (31) ஆம் திகதி துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா அவர்கள் வருகை தந்து மாணவர்களுக்கு இந்த துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தார்.

வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தினருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு 573 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் சில்வஸ்டர் பெரேரா அவர்களது பூரன அனுசரனையுடன் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.bridge media | Nike Shoes