Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th December 2021 19:45:27 Hours

இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு கோதமிகம குடும்பத்திற்கு வழங்கி வைப்பு

கதிர்காமம் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே திரு திஷான் குணசேகர மற்றும் கலாநிதி தினுஷான் வன்னியாராச்சி ஆகியோர் வழங்கிய நிதியுதவியில் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் 122 வது பிரிகேடின் 23 வது கஜபா படையணியின் சிப்பாய்களால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு கோதமிகமவிலுள்ள வறிய குடும்பமொன்றிற்கு வழங்கி வைக்கப்பட்டது.

ஜி.கே.எம்.கயான் புஷ்ப குமார மற்றும் அவரது குடும்பத்தினரின் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் வாழ்க்கை தரம் தொடர்பில் 122 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜானக பல்லேகும்புர அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து, புதிய வீட்டை நிர்மாணிப்பதற்காக 122 வது பிரிகேடின் 3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியினரால் நன்கொடையாளர்களின் உதவி கோரப்பட்டிருந்த நிலையில், உதவிகளை வழங்குவதாக நன்கொடையாளர்கள் உறுதியளித்திருந்தனர்.

நன்கொடையாளர்களில் ஒருவரான வைத்தியர் தினுஷான் வன்னியாராச்சி, 122 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜானக்க பல்லேகும்புர மற்றும் 3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரின் பங்கேற்புடன் கோதமிகமவில் வெள்ளிக்கிழமை (3) இடம்பெற்ற நிகழ்வில் வீட்டின் சாவிகள் பயனாளியிடம் சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.

பாதுகாப்புப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் வகையிலான் இத்திட்டமானது, 12 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க மற்றும் 122 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜானக்க பல்லேகும்புர ஆகியோர் சமூகத் திட்டத்திற்கு தமது ஆசிகளை வழங்கினர்.

இந் நிகழ்வுகள் மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களுடன் ஆரம்பமாகியிருந்த அதேநேரம் உரிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.