Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd July 2017 11:18:44 Hours

இரண்டாவது முப்போட்டி நிகழ்வுகள்

நீச்சல், சைக்கிள் ஓட்டம் மற்றும் ஓட்டம் உட்பட இராணுவ இரண்டாவது முப்போட்டி சனிக்கிழமை (1) திகதி அம்பிலிபிடிய சந்திரிகா குளம் தாவுல்லைக்கு அருகாமையில் இடம்பெற்றது.

இராணுவ தளபதியின் எண்ணக் கருவிற்கு அமையில் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்களின் பங்களிப்புடன் இராணுவ விளையாட்டு கட்டுபாட்டுச் சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட 750 மீற்றர் நீச்சல் போட்டிகள்,20 கிலோ மீற்றர் சைக்கிள் ஓட்டப் போட்டிகள் மற்றும் ஓட்டப் போட்டிகள் இடம்பெற்றன. இப்போட்டிக்கு இராணுவத்தில் 10 படையணி இணைந்ததுடன் 100 இராணுவ விளையாட்டு வீர வீராங்கனைகள்கலந்து கொண்டனர்.

எதிர்காலத்தில் விளையாட்டு துறையில் ஏற்படும் சவால்களை வெல்வதற்கு இராணுவ விளையாட்டு வீர வீராங்கனைகளை பலப்படுத்தும் நோக்கத்தில் இந்த விளையாட்டுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டிக்கு மேஜர் ஜெனரல் அமல் கருணாகேசகர அவர்கள் வருகை தந்தார். அவரை இராணுவ விளையாட்டு சங்கத்தின் செயலாளர் பிரிகேடியர் சந்தன ரணவீர வரவேற்றார்.

போட்டியில் முதலாவது இடத்தை பீரங்கிப் படையினரும், இரண்டாவது இடத்தை இலங்கை பொறியியலாளர் படையணி மற்றும் பொறிமுறை காலாட் படையினர் பெற்றுக் கொண்டனர்.

வெற்றியாளர்களின் விபரங்கள் கீழ்வருமாறு:

ஒற்றை – ஆண் (இறுதி முடிவு)

சமீக்ஞை படையாளி ஜி.ஜே.ஏ.எல் பெரேரா - இசப – முதலாவது இடம்

துப்பாக்கியாளர் பீ.எச்.டி ராஜபக்ஷ - இபீப - இரண்டாவது இடம்

பொம்படியர் கே. கே. ஜி. எல் குமாரசிங்க - இபீப - இரண்டாவது இடம்

ஒற்றை – பெண் (இறுதி முடிவு)

மகளீர் படையணி எஸ்.என்.ஏ குணதிலக – 2 (தொண்டர்) இமப – முதலாவது இடம்

மகளீர் படையணி டி.எம்.ஐ லக்மாலி – 2 (தொண்டர்) இமப - இரண்டாவது இடம்

Sportswear free shipping | Asics Onitsuka Tiger