Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st August 2023 20:37:28 Hours

இயந்திரவியல் காலாட் படையணியின் புதிய படைத்தளபதி கள விஜயம்

இயந்திரவியல் காலாட் படையணியின் புதிய படைத்தளபதியும், பொதுபணி பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை இயந்திரவியல் காலாட் பிரிகேட், இயந்திரவியல் காலாட் பயிற்சிப் பாடசாலை, 1 , 2 , 3 மற்றும் 5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணிகளுக்கும் அவற்றின் செயல்பாட்டு அம்சங்களைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக ஓகஸ்ட் 24 தொடக்கம் 27 வரையான காலப்பகுதியில் விஜயத்தை மேற்கொண்டார்.

ஒவ்வொரு வருகையின் போதும், வருகை தந்த படைத் தளபதியை அந்தந்த கட்டளை அதிகாரிகள் அன்புடன் வரவேற்றதுடன், தமது முகாம்களின் செயல்பாடுகளின் விளக்கங்களையும் அளித்தனர்.

அவர் முகாம் வளாகத்திலிருது வெளிச்செல்லும் முன், நினைவுச் சின்னமாக முகாம் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டுவதற்கும் அழைக்கப்பட்டார்.

நிலையத் தளபதி பிரிகேடியர் ஏஎம்ஏ அபேசிங்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் இயந்திரவியல் காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜேஎம்ஏ ஜெயசேகர ஆர்எஸ்பீ யுஎஸ்பீ மற்றும் பணிநிலை அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.