Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th September 2024 21:53:00 Hours

இயந்திரவியல் காலாட் படையணியினால் விஷேட சிரமதான பணி முன்னெடுப்பு

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இயந்திரவியல் காலாட் படையணி படையினர் இப்பங்கட்டுவ நீர்த்தேக்கத்தின் கரையை சுத்தப்படுத்தும் விஷேட சிரமதான பணியினை யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இயந்திரவியல் காலாட் படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இயந்திரவியல் காலாட் படையணி நிலைய தளபதி பிரிகேடியர் ஏகே பீரிஸ் ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் 07 செப்டம்பர் 2024 அன்று ஏற்பாடு செய்திருந்தனர்.

இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தின் 15 அதிகாரிகள் மற்றும் 200 சிப்பாய்கள் இந்த துப்புரவுத் திட்டத்தில் பங்கேற்றனர்.

தம்புள்ளை மாநகர சபை, தம்புள்ளை பொலிஸ் நிலையம், மகாவலி அலுவலகம் இப்பங்கட்டுவ, மற்றும் தம்புள்ளை சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரும் இந்நிகழ்வை வெற்றியடையச் செய்வதற்கு தங்களின் முழுமையான உதவிகளையும் பங்களிப்பையும் வழங்கினர்.