Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th August 2021 21:45:03 Hours

இயந்திரவியல் காலாட்படையணியின் புதிய படைத் தளபதி பரீட்சார்த்த விஜயம்

மேஜர் ஜெனரல் பிரியந்த பெர்ணான்டோ இயந்திரவியல் காலாட்படை படையணியின் புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மெனிக் பார்ம் இயந்திரவியல் காலாட்படை பயிற்சி நிலையம் மற்றும் மெனிக் பார்மில் உள்ள 2 வது இயந்திரவியல் காலாட்படைக்கும் 13 ஆகஸ்ட் 2021 அன்று மேற்கொண்டார். இதன்போதான நிகழ்வுகள் உரிய சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி முன்னெடுக்கப்பட்டன.

நிகழ்வில் ஆரம்ப கட்டமாக முதலில் இயந்திரவியல் காலாட்படை பயிற்சி நிலையத்திற்கு வருகை தந்த தளபதிக்கு இயந்திரவியல் காலாட்படை பயிற்சி நிலையத்தின் தளபதி கேணல் ஏ.கே.பீரிஸ் அவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டது. அதனையடுத்து மரக்கன்று ஒன்றை நாட்டி வைக்குமாறு தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதுடன், குழு புகைப்படும் எடுக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.

தளபதி முகாம் வளாகத்திற்குச் செல்வதுக்கு முன்பாதாக இயந்திரவியல் காலாட்படை பயிற்சி நிலைய தளபதியினால் விளக்கமளிக்கப்பட்டதுடன் படைத் தளபதியினால் படையினருக்கு உரை நிகழ்த்தப்பட்டது. பின்னர் அவர் 2 வது இயந்திரவியல் காலாட்படைக்கு இராண்டாம் கட்டமாக படைத் தளபதி 2 வது இயந்திரவியல் காலாட் படைக்கு விஜயம் செய்தபோது அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதோடு படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் கே.ஜி.என்.என் காரியவசம் அவர்களால் தளபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

அதனையடுத்து அவரது விஜயத்தின் நினைவாக மரக்கன்று ஒன்றை நாட்டி வைக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டதுடன், குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வினை தொடர்ந்து படையணி வளாகத்தை மேற்பார்வை செய்தார், இறுதியாக தளபதி வருகையை குறிக்கும் வகையில் விருந்தினர் பதிவேட்டில் தனது எண்ணப் பகிர்வுகளை குறிப்பிட்டார்.

இயந்திரவியற் காலாட் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் சாகர வணசிங்க மற்றும் இயந்திரவியல் காலாட் படை பிரிகேட் தளபதி பிரிகேடியர் காவிந்த பாலசூரிய ஆகியோரும் மேற்படி நிகழ்வுகளில் பங்கெடுத்தனர்.