12th December 2023 18:42:35 Hours
தம்புள்ளையில் உள்ள இயந்திரவியற் காலாட் படையணி தலைமையக படையினர், தம்புள்ளை, பலகல, தம்புலுஹல்மில்லேவ குளத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 10) பெய்த கனமழையால் குளம் முழு கொள்ளளவிற்கு நிரம்பியதையடுத்து, மணல் மூட்டைகளை அடுக்கி, அச்சுறுத்தலுக்கு உள்ளான வெடிப்பை உடனடியாக சீர்செய்தனர்.
குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து சிறிய விரிசல் ஏற்பட்டதையடுத்து, கிராம மக்கள் உடனடியாக இராணுவத்தின் உதவியை நாடினர்.
இயந்திரவியற் காலாட் படையணி தலைமையக படையினர், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி அதிகாரிகள், பொதுமக்களுடன் இணைந்து சேதத்தைத் தடுப்பதற்கு தமது உதவியினை வழங்கினர்.