Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th December 2021 10:00:33 Hours

இயந்திரவியற் காலாட்படையணியின் ஓய்வுபெறும் தளபதிக்கு பிரியாவிடை

ஓய்வு பெறும் படையணி தளபதி மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோவுக்கு தம்புலுஹல்மில்லவெவவில் உள்ள இயந்திரவியற் காலாட்படைப் படையணியின் தலைமையகத்தில், டிசம்பர் 05 ஆம் திகதி பிரியாவிடை நிகழ்வொன்று நடத்தப்பட்டது.

படையணிக்கு வருகை தந்த தளபதிக்கு இயந்திரவியற் காலாட் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் குமார வணசிங்க மற்றும் படையணியின் சபை உறுப்பினர்களால் வரவேற்பளிக்கப்பட்டது.

அதனையடுத்து, வழங்கப்பட்ட பாதுகாவலர் அறிக்கையில் மரியாதையை தொடர்ந்து தளபதியால் போர் வீரர்களின் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் படையினருக்கான உரையொன்றினை நிகழ்த்திய அவர் படையணின் 12 வது தளபதியான தனக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றிகளை கூறிக்கொண்டார்.

இந்நிகழ்வின், மற்றுமொரு அம்சமாக புதிதாக படையணியில் நிர்மாணிக்கப்பட்ட பரிசோதனை அறை, நூலகம் மற்றும் திறந்தவெளி அரங்கம் ஆகியவற்றை திறந்து வைப்பததை தொடர்ந்து இயந்திரவியற் காலாட்படையணியின் விருந்தினர் பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்டார்.

இறுதியாக அவர் விடைபெற்றுச் சென்ற போது அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.