Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th July 2018 14:11:38 Hours

இபலோகம பயிற்சி பாடசாலையிலிருந்து 289 பயிலுனர் வெளியேற்றம்

இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் சேவை படையணியில் புதிதாக இணைந்த இருநூற்று எண்பத்தொன்பது பயிலுனர்களின் பயிற்சி நிறைவு வெளியேற்ற நிகழ்வு 11 ஆவது இலங்கை பீரங்கிப் படையணி தலைமையக மைதானத்தில் (30) ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றன.

பயிலுனர்கள் ஆறு மாதகால பயிற்சியை இபலோகம பயிற்சி பாடசாலையிலிருந்து பெற்றுக் கொண்டனர்.

இந்த பயிற்சி வெளியேற்ற நிகழ்வில் இந்த பயிலுனர்களின் பங்களிப்புடன அணிவகுப்பு, உடற்பயிற்சி, டைகொண்டோ கராத்தே கண்காட்சிகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் கே.டீ.சி.ஜி.ஜே திலகரத்ன அவர்கள் வருகை தந்தார்.

பயிலுனர்களின் பயிற்சியில் சிறந்த துவக்கு சூட்டாளராக போர்வீரன் எச்.ஏ.என்.எம் ஹேரத் அவர்களும், இந்த பயிற்சியில் அனைத்து துறைகளிலும் சிறந்த தேர்வாளராக போர் வீரன் டீ.எம்.என்.எஸ் தவுன்டசேகர அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்களுக்கு பிரதம அதிதியினால் வெற்றி கிண்ணங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், படை வீரர்கள் மற்றும் பயிற்சி பயிலுனர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தார் இணைந்திருந்தனர்.

Sports brands | jordan Release Dates