Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th May 2021 05:09:33 Hours

இனாமலுவ தேசிய இளைஞர் படையணி தற்போது கொவிட் 19 தொற்றாளர்களுக்காக

53 வது படைப்பிரிவு படையினரால் தம்புல்ல இனாமலுவ தேசிய இளைஞர் படையணியினை இடைநிலை பராமரிப்பு நிலையமாக மேம்படுத்தப்பட்டு அதன் நடவடிக்கைகள் திங்கள்கிழமை (24) முதல் ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் நோயாளிகளுக்கு அவசர தேவைக்கு தங்க வைப்பதற்காக 53 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே வழங்கிய வழிகாட்டுதல்களின்படி தம்புல்ல ஆதார வைத்தியசாலையின் சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஆதரவுடன் 154 கட்டில் வசதிகளுடனான இடைநிலை பராமரிப்பு நிலையம் படையினரால் மேம்படுத்தப்பட்டது.

நடவடிக்கை தொடக்க நிகழ்ச்சியில் தம்புல்ல வைத்தியசாலையின் சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.