30th July 2020 14:01:53 Hours
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு இணைப்பதிகாரியான கெப்டன் விகாஷ் சோட் அவர்கள் கோவிட் – 19 மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இம் மாதம் (27) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.
வருகை தந்த இந்திய பாதுகாப்பு இணைப்பதிகாரியை இராணுவ தளபதி அவர்கள் வரவேற்று பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவை மேம்படுத்தும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டனர். இறுதியில் இருவருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன.
மேலும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி தற்போதைய கோவிட் நிலைமை தொடர்பாகவும் இராணுவ தளபதியிடம் கேட்டறிந்தார். இச்சந்தர்ப்பத்தில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பிரதி பாதுகாப்பு இணைப்பதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் ரவி மிஷ்ரா அவர்களும் இணைந்திருந்தார். Nike air jordan Sneakers | Men Nike Footwear