Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th October 2021 15:50:09 Hours

இந்திய இராணுவத்திடமிருந்து இலங்கை படையினருக்கு கிடைக்கும் ஒத்துழைப்புக்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு

இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே இலங்கையில் தங்கியிருக்கும் நிலையில் புதன்கிழமை (13) மரியாதை நிமித்தமாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது ஜெனரல் முகுந்த நரவனே இருநாட்டு இராணுவங்குக்குமிடையில் சிறப்பான நட்புறவு காணப்படுவதாகவும் இருநாட்டு ஒத்துழைப்புக்களை மேலும் ஊக்குவித்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்திய இராணுவம் மிக நீண்ட காலமாக இலங்கை இராணுவத்திற்கு வழங்கி வருகின்ற ஒத்துழைப்புக்களுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இனவாதம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பில் பிராந்திய ரீதியில் காணப்பட வேண்டிய அவதானம் தொடர்பிலும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டதோடு நாட்டிற்காக அர்பணிப்பு செய்த போர் வீரர்களை பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.