Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th December 2023 18:45:26 Hours

இதல்கஸ்ஹின்ன ரயில் பாதை தடை நீக்கம்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் புதன்கிழமை (டிசம்பர் 06) அப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரத பாதையில் விழுந்த மண் மேடுகளை அகற்றினர்.

இந்த தடை காரணமாக கொழும்பில் இருந்து பதுளை வரை செல்லும் மலையக ரயில் பாதை தடைபட்டிருந்த்தை தொடர்ந்து படையினர் காலை வேளையில் மண் மேடுகளை அகற்றி ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு வசதிகளை செய்தனர்.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் அறிவுரைகளுக்கமைய படையினரால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.