12th September 2021 14:00:02 Hours
இங்கிலாந்தில் வசிக்கும் ரெஷான் தினால் டி அல்விஸ், சேனானி கொடித்துவக்கு, நிஹால் ரத்நாயக்க, கித்மினி கொடித்துவக்கு, ஒல்கா செனவிரத்ன, சோம கீர்த்தி ராஜசிங்க மற்றும் நில்மினி லங்காதிலக ஆகியோரின் நிதி அனுசரணையுடன் ஒவ்வொன்றும் 5000.00 ரூபாய் பெறுமதியான 100 உலர் நிவாரண பொதிகள் வவுனியா கிராமப்புற பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை (10) பகிர்ந்தளிக்கப்பட்டன.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார , 56 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி பெரேரா ஆகியோரும் மேற்படி உலர் நிவாரண பொதிகளை விநியோகிக்கும் திட்டத்தில் பங்கேற்றிருந்ததுடன், 56 வது படைப்பிரிவின் பொது பதவி நிலை அதிகாரி (ஒருங்கிணைப்பு) லெப்டினன் கேணல் பிரஷாந்த டி சில்வா அவர்களின் ஏற்பாட்டில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
563 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பண்டுக பெரேரா, சிவில் விவகார அதிகாரி லெப்டினன்ட் கேணல் சுஜீவ பிரியந்தலால், 21 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் சனத் நிலமல்கொட, 7 வது இலங்கை சிங்கப்படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜனக பெரேரா ஆகியோர் உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி நிகழ்வில் கலந்துகொண்டனர்.