Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th July 2021 12:19:43 Hours

ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸில் வசிக்கும் இலங்கையர்கள் கொவிட் சிகிச்சைக்கான மருத்துவ சாதனம் பரிசளிப்பு

ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸில் வசிக்கும் குடும்பம் புதன்கிழமை (7) கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் கொவிட் -19 சிகிச்சைப் பிரிவுக்கு சுமார் ஒரு மில்லியன் ரூபா மீ மதிப்புள்ள எஃப் அண்ட் பி ஏர்வோ 2 ஹை புளோ ஒக்ஸிஜன் தெரபி சாதனத்தை பரிசளித்தது.

இந்த முக்கியமான மருத்துவத் தேவையின் தேவையை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் வசிக்கும் வைத்தியர் சதீகா கமலாதாச, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து இராணுவ வைத்தியசாலையின் கதிரியக்க வைத்திய நிபுணர் பிரிகேடியர் வைத்தியர் தில்ருக்ஷி முனசிங்க மற்றும் இராணுவத்தின் மயக்க மருந்து நிபுணர் கேணல் வைத்திய சம்பிகா அபேசிங்க ஆகியோரிடம் ஒப்படைத்தார்.

இராணுவத் தளபதியின் சார்பாக நன்கொடையினை பெற்றுக் கொண்டவர்கள் வைத்திசாலையில் சிகிச்சைப் பெறும் கொவிட் 19 நோயாளிகள் சார்பாக நன்றி தெரிவித்தனர்.