27th August 2023 10:52:24 Hours
இராணுவத் தலைமையகத்தில் பல்வேறு படைப்பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 30 சிப்பாய்களுக்கான ‘ஒப்பீட்டுப் பட்டறை' ஒன்றை இராணுவ வீரர்களின் திறமைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆளனி நிர்வாக பணிப்பகம் ஏற்பாடு செய்தது.
பாடநெறி ஓகஸ்ட் 7 ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை நடைபெற்றது. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன பயிற்சி நிலையத்தின் புகழ்பெற்ற பயிற்றுவிப்பாளர் திருமதி துஷாரி வெலகெதர, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சிரச தொலைக்காட்சியில் பணியாற்றிய செல்வி. வாசனா லக்மாலி, ஆளனி நிர்வாக பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கேஏயு கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி ஐஜி மற்றும் தலைமை சமிக்ஞை அலுவலகத்தின் அதிகாரிகளால் இப்பட்டறை நடத்தப்பட்டது.
ஒப்பீட்டுப் பட்டறை பாடநெறி ஓகஸ்ட் 21 அன்று முடிவடைந்ததுடன், கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆடபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார்.