29th December 2021 16:18:06 Hours
64 வது படைப்பிரிவு தலைமையகத்தின் 641 வது பிரிகேடின் வேண்டுகோளுக்கிணங்க எம் என் ஐ எஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் அதன் ஊழியர்களின் உதவியுடன் ஒட்டுச்சுட்டான் கருவளைக்கந்தல் பகுதி ஆரம்ப பிரிவு பாடசாலையில் கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கான அத்தியாவசிய பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தகங்கள் என்பன டிசம்பர் 15 ஆம் திகதி அன்பளிப்புச் செய்யப்பட்டன.
641 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜானக் ஜயவர்தன மற்றும் 641 வது பிரிகேட் படையினர் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டு பரிசுப் பொருட்களை பகிர்ந்தளித்தனர். மேலும் 641 வது பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி மற்றும் 14 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
மேற்படி, ஆரம்ப பிரிவு பாடசாலையானது 641 வது பிரிகேடின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.