Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th November 2024 20:14:14 Hours

ஆயுதப் படைகளின் வருடாந்த பொப்பி நினைவு கூறல் - 2024

கஜபா படைவீரர் சங்க தலைவரின் வழிகாட்டுதலின் கீழ், கஜபா படையணி தலைமையகம் 4 நவம்பர் 2024 அன்று பொப்பி நினைவு மலர் சூட்டும் விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

வருடாந்த ஆயுதப்படைகளின் பொப்பி நினைவு கொண்டாட்டம், 2024 இன் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு நடாத்தப்படுவதுடன் சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் முன்னாள் படை வீரர் சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

கஜபா படைவீரர் சங்க தலைவர், அனுராதபுரம், கெக்கிராவ மற்றும் கஹட்டகஸ்திகிலிய பிரிவுகளைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்கள், பிராந்திய சுகாதார பணிப்பாளர், மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் அவர்களது அலுவலக ஊழியர்களுக்கு பொப்பி மலர்களை சூட்டினர்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரமுகர்கள் பங்குபற்றினர்.