Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th August 2021 22:00:08 Hours

ஆதன முகாமைத்துவ பணிப்பாளர் கடமைகளை ஆரம்பித்தார்

இயந்திரவியல் காலாட்படையின் பிரிகேடியர் ஜானக பிரியதர்ஷன இராணுவ தலைமையகத்தில் உள்ள ஆதன முகாமைத்துவ பணிப்பகத்திகத்தின் 18 வது பணிப்பாளராக வியாழக்கிழமை (12) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிதாக நியமனம் பெற்றுக்கொண்ட பணிப்பாளர் மத அனுட்டானங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.

பிரிகேடியர் எஸ்.கஸ்தூரிமுதலி இலங்கை தேசிய பாதுகாப்பு சேவை கல்லூரியில் நியமனம் ஒன்றை பெற்றுக்கொண்டுள்ள நிலையிலேயே புதிய பணிப்பாளர் நியமனம் பெற்றுள்ளார்.

இந்நிகழ்வில் பணிப்பகத்தின் பணி நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டிருந்ததோடு, பிரிகேடியர் ஜானக பிரியதர்ஷன மேற்படி நியமனத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் இயந்திரவியல் காலாட்படையின் பிரிகேட்டின் தளபதியாக நியமனம் வகித்தார்.