21st December 2021 10:00:22 Hours
இலங்கை இராணுவ மின்னியல் மற்றும் இயந்திர பொறிமுறை படையணியின் 72 வது ஆண்டு பூர்த்தி விழா நிகழ்வினை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (12) படையணி தலைமையகத்திற்கு வருகை தந்திருந்த இலங்கை இராணுவ மின்னியல் மற்றும் இயந்திர பொறிமுறை படையணியின் படைத் தளபதி இந்து சமரகோன் அவர்களுக்கு படையணியின் சிப்பாய்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
அணிவகுப்பு மரியாதை மற்றும் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையை தொடர்ந்து சிப்பாய்கள் விருந்தகத்தில் நடைபெற்ற அனைத்து நிலைகளுக்குமான மதிய விருந்துபசாரத்தில் தளபதியவர்கள் கலந்துகொண்டார். மேலும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.
அதேநேரம் போரில் உயிர் நீத்த மின்னியல் மற்றும் இயந்திர பொறிமுறை படையணியின் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மின்னியல் மற்றும் இயந்திர பொறிமுறை படையணியின் பாடசாலைக்கு முன்பாக வீரமரணம் எய்திய வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் கௌரவமான விதத்தில் அனுட்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மின்னியல் மற்றும் இயந்திர பொறிமுறை படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் எஸ்ஏ பத்திரன, மின்னியல் இயந்திர பொறிமுறை பயிற்சி கல்லூரியின் தளபதி கேணல் ஆர்டி லொக்குதொட்டஹேவா, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் மேற்படி சமூக பணிகளில் பங்கெடுத்துக்கொண்டனர்.