Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th September 2024 20:57:06 Hours

ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறி இல-101ன் விடுகை அணிவகுப்பு

ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறி எண். 101 இன் விடுகை அணிவகுப்பு 30 ஆகஸ்ட் 2024 அன்று புத்தளத்தில் உள்ள ஆட்சேர்ப்பு பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக 58 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சிஏ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்கள் கலந்துகொண்டார்.

ஆறு மாத அடிப்படை பயிற்சி பாடநெறியினை நிறைவு செய்த எண்பது பேர் பல்வேறு படையணிகளுக்கு அனுப்பப்பட்டனர்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் ஆட்சேர்ப்பாளர்களின் நலன் விரும்பிகள் அணிவகுப்பைக் கண்டுகளித்தனர்.