Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th October 2021 14:40:04 Hours

ஆட்சேர்பு 2 வது பாடநெறி விடத்தல்பளையில் ஆரம்பம்

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 52 வது படைப்பிரிவின் கீழுள்ள விடத்தப்பளையிலுள்ள பயிற்சி பாடசாலையில் ஆட்சேர்ப்பு பாடநெறி 2 வியாழக்கிழமை (7) ஆரம்பமாகியது.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு அவர்களின் வழிகாட்டலின் கீழ் நடத்தப்படும் ஆட்சேர்பு பயிற்சி திட்டம் இராணுவத்தின் ‘முன்னோக்கு மூலோபாய திட்டம் 2020 - 2025' திட்டத்தின் கீழ் நான்கு மாதங்களுக்கு தொடரும்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு படையினருக்கு உரை நிகழ்த்திய பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க, சிவில் வாழ்விலிருந்து இராணுவ வாழ்க்கைக்கான பயிற்சிகளை பெற்றுக்கொள்பவர்களுக்கு இராணுவ பயிற்சிகளின் முக்கிய அம்சங்கள் தொடர்பாக எடுத்துரைத்தார். அத்தோடு, அவர்களின் பயிற்சி காலத்திலும் இராணுவ சேவைக்காலத்திலும் பின்பற்ற வேண்டிய ஒழுக்கம் நடத்தை, அர்ப்பணிப்பு ஆகியவை தொடர்பாகவும் அவர் அறிவுறுத்தினார்.

சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்களைச் சேர்ந்த 233 இளைஞர்களைக் கொண்ட புதிய பயிற்சி குழுவினர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். 52 வது படைப்பிரிவு தளபதியின் மேற்பார்வையில் 2022 பிப்ரவரி 7 வரை இப்பயிற்சிகள் தொடரும்.

521,522 மற்றும் 523 பிரிகேட்களின் தளபதிகள், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பணியாளர்கள் பயிற்சிப் பாடசாலையின் பிரதம பயிற்சி ஆலோசகர்,கட்டளை அலகுகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் பயிற்சி பாடசாலையின் பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோரும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர்.