Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th October 2021 05:00:59 Hours

அவுஸ்திரேலிய வதிவிட பிரஜையின் அனுசரணையுடன் 12 வது படைப்பிரிவினால் மாணவர்களுக்கு டேப்லெட் கணினிகள் வழங்கள்

12 வது படைப்பிரிவுத் தளபதியவர்களின் ஒருங்கிணைப்பு மூலம் இலங்கை இராணுவ ஆண்டு விழாவினை முன்னிட்டு அப்படைப்பிரிவினால் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் வசிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய மாணவர்களுக்கு 11 டேப்லெட் கணினிகள் ஞாயிற்றுக்கிழமை (10) ஆம் திகதி அன்பளிப்பு செய்யப்பட்டன. இதற்கான அனுசரணையானது அவுஸ்திரேலிய வதிவிட பிரஜையான திரு ஜெயந்த ஜயரத்ன அவர்களினால் வழங்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்கவின் நெருக்கமான ஒருங்கிணைப்பில் 'லைவ் இன் அவுஸ்திரேலியா' அமைப்பு இந்த திட்டத்திற்கு உதவ முன்வந்தது. அந்த பகுதியில் உள்ள கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் குறித்த தகுதியான மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன் மேற்படி 11 டேப்லெட் கணினிகளின் மொத்த மதிப்பு ரூபா 400,000/= ஆகும். இந்த நிகழ்வில் 12 வது படைப் பிரிவின் தளபதி, மற்றும் அப்படைப் பிரிவின் சில சிரஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டார்.