Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th August 2022 13:00:27 Hours

அராலி முனையில் மறைந்த இராணுவ வீரர்களை நினைவு கூறல்

லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த பல இராணுவ வீரர்களின் 30 வது நினைவு தினம் திங்கட்கிழமை (08) யாழ் அராலி முனை நினைவுத் தூபியில் இடம்பெற்றது. 51 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில், 52 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோ பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், 55 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன, வடமாகாண விமானப்படை பிரதி தளபதி கொமடோர் கே.கே.ஐ.யு. காசிவத்த, பலாலி விமானப்படைத் தள இரண்டாம் தளபதி விங் கமாண்டர் பி.பி விதானபத்திரன உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இலங்கை இராணுவ வரலாற்றில் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த போர்வீரர்களில் ஒருவரான லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ 1992 ஆகஸ்ட் 08 திகதி சக இராணுவ வீரர்களான மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன, ரியர் அட்மிரல் மொஹான் ஜயமஹா, லெப்டினன் கேணல் எச்.ஆர் ஸ்டீபன், லெப்டினன் கேணல் ஜி.எச். ஆரியரத்ன, லெப்டினன் கேணல் வைஎன் பலிபான, கமாண்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன் கேணல் நளின் டி அல்விஸ், லெப்டினன் கமாண்டர் சி.பி. விஜேபுர மற்றும் சிப்பாய் டபிள்யூஜே விக்ரமசிங்க ஆகியோருடன் யாழ்ப்பாண அராலி பிரதேசத்தில் வீரமரணமடைந்தார்.

மலர் அஞ்சல் செலுத்தல் மற்றும் இறுதி இசை வாசித்தலுடன் அன்றைய நினைவு நிகழ்வு முடிவுக்கு வந்தது. நன்றியுணர்வுடன் கூடிய அதிகாரிகள், படைப்பிரிவுத் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் பிரதிநிதிகளாக கலந்துகொண்டனர்.