Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd October 2023 21:07:44 Hours

அம்பேபுஸ்ஸ ‘வேகம் மற்றும் விவேகத்திற்கு’ 67 வருடங்கள்

இராணுவத்தின் மிகச்சிறந்த காலாட் படையணிகளின் ஒன்றான இலங்கை சிங்க படையணியின் வீரம் மற்றும் துணிச்சலின் நிரூபணமான சாதனையுடன் ஞாயிற்றுக்கிழமை (ஓக்டோபர் 1) தனது 67 வது ஆண்டு நிறைவை அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்க படையணியின் தலைமையகத்தில் பல நிகழ்வுகளுடன் கொண்டாடியது.

இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியும் இராணுவத்தின் வழங்கல் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஜி.ஆர்.ஆர்.பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இலங்கை சிங்க படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் சிஎஸ் திப்பொட்டுகே அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

முதலில், அன்றைய பிரதம அதிதிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து மரியதை அணிவகுப்பும் வழங்கப்பட்டது.

அதன் பின்னர், இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து இலங்கை சிங்க படையணியின்யின் போர்வீர்ர் நினைவுச் தூபியில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

மேஜர் ஜெனரல் ஜிஆர்ஆர்பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் அனைத்து நிலையினருடன் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துக்கொண்டதுடன் அன்றைய நிகழ்ச்சியின் இறுதியில் சிப்பாய் உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிலையினருக்குமான மதிய உணவு விருந்திலும் கலந்துகொண்டார்.