11th May 2023 18:55:47 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அம்பாறை 24 வது காலாட் படைப்பிரிவின் பிரிகேட்கள் மற்றும் படையலகுகளின் படையினர் 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வெசாக் போயா 2023 (மே 05) தினத்தில் வெசாக் விழாவை கொண்டாடினர்.
24 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் படையினர் அம்பாறை, மல்வத்தை சந்தியில் சுழலும் வெசாக் கூடு ஒன்றை நிர்மாணித்தனர். அதே சமயம், 24 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் தானம் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றதுடன், பக்தர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் கருப்பட்டியுடன் கூடிய சுவையான கொத்தமல்லி பானமும் வழங்கப்பட்டது.
241 வது காலாட் பிரிகேட் படையினர், அக்கரைப்பற்று படைத் தலைமையகத்திற்கு முன்பாக, தளபதியின் ஆசீர்வாதத்துடன், சவ்வரிசி கஞ்சி வழங்கினர். மேலும், 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர், நீத்த சீலத்தலாராம விகாரையில் போதி பூஜையிலும் இணைந்து கொண்டனர். மேலும் படையினர் எரகமவில் கொத்தமல்லி பானம் வழங்கியதுடன், அக்கரைப்பற்று விகாரையில் வண்ணமயமான வெசாக் கூடுகளையும் வடிவமைத்தனர்.
16 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் 'வெசாக்' பண்டிகையை முன்னிட்டு அண்ணமலை பகுதியில் உள்ள மக்களுக்காக போதி பூஜை மற்றும் தனம் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தனர். 18 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் அப்பகுதி மக்களுக்காக காரைதீவு மக்களுக்காக அன்னதானம் வழங்கியதுடன், கல்முனை நகரில் சுழலும் வெசாக் கூடுகளை காட்சிப்படுத்தியதுடன், விழாவிற்கு மேலும் மதிப்பு சேர்க்கப்பட்டது.
242 வது காலாட் பிரிகேட் பகுதியில் வெசாக் விழாவைக் கொண்டாடும் வகையில், பிரிகேட் தலைமையகம் மற்றும் கட்டளையின் கீழ் உள்ள படையலகுகளின் ஒவ்வொரு தலைமையகத்திலும் வண்ணமயமான வெசாக் கூடுகளைக் காட்சிப்படுத்தியதுடன், 23 வது இலங்கை சிங்கப் படையணித் தலைமையகம் மற்றும் 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தில் முறையே மூன்று இலவச அன்னதானங்கள் வழங்கும் நிகழ்வையும் ஏற்பாடு செய்திருந்தனர்.