Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th August 2023 17:50:05 Hours

அம்பாறை போர் பயிற்சி பாடசாலையின் படையினருக்கு வாய் சுகாதார மருத்துவ சிகிச்சை

அம்பாறை போர் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் டி.ஆர்.என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையில் உள்ள படையினர் மற்றும் அம்பாறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகளுடன் இணைந்து வாய் புற்றுநோய் பல் சிகிச்சை நிலையத்தை புதன்கிழமை (ஓகஸ்ட் 09) அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் ஏற்பாடு செய்தனர்.

அம்பாறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள 300 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களின் பல் துவாரங்கள், சிதைவுகள் மற்றும்வாய் ஆரோக்கியம் போன்றவற்றைப் பரிசோதிக்கும் வகையில், இப்பகுதியில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் வாய்வழி சுகாதாரத் தரங்களை ஆராயும் வகையில் இந்த நிகழ்ச்சித்திட்டம் இடம்பெற்றது.

பல் அறுவை பல் சிகிச்சை நிபுணர் பி.டி.சி பெர்னாண்டோ, பல் மருத்துவர் ஏ தமிழ்செல்வி, பல் மருத்துவர் எம் எச் எஸ் எம் பெர்னாண்டோ மற்றும் பல் மருத்துவர் எம்ஏடி லக்மால் ஆகியோர் இணைந்து 24 வது காலாட் படைப்பிரிவு,241 வது காலாட் பிரிகேட், 242 வது காலாட் பிரிகேட்,14 வது சிங்க படையணி, 5 வது கெமுணு ஹேவா படையணி, 8 வது தேசிய பாதுகாவலர் படையணி, 11 வது தேசிய பாதுகாவலர் படையணி, 16 வது தேசிய பாதுகாவலர் படையணியின் தீகவாபி விகாரை நிர்மாணிப்பு திட்டத்தின் சிப்பாய்கள் மற்றும் அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலை சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகள் இம் மருத்துவ சிகிச்சையில் இணைந்துகொண்டனர்.