17th September 2023 20:13:36 Hours
2023 ஜூலை 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மூன்று வார நீண்ட கற்பித்தல் முறைமை பாடநெறி- 68 இணை்டு மாதங்களின் பின்னர் அம்பாறை போர் பயிற்சி கல்லூரியில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) முடிவடைந்தது.
இராணுவத்தில் உள்ள அனைத்து படையணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 164 சிப்பாய்கள் இந்த பாடநெறியில் பங்குபற்றியதுடன் 15 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியை சேர்ந்த சிப்பாய் கே.ஏ.என்.டி விஜேசிங்க தகுதி வரிசையில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
போர் பயிற்சி கல்லூரியின் தளபதி பிரிகேடியர் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்கள் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கியதன் பின்னர் நிறைவுரையை நிகழ்த்தினார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய் பயிற்றுனர்களும் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.