Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th October 2022 18:50:54 Hours

அம்பாறை போர்ப் பயிற்சிப் பாடசாலையில் கற்பித்தல் முறைமை பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

கற்பித்தல் முறைமைகள் பாடநெறி இல-59 இல் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (3) அம்பாறை போர்ப் பயிற்சிப் பாடசாலையில் இடம்பெற்றது.

அன்றைய நிகழ்வின் பிரதம அதிதியாக அம்பாறை போர்ப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ருவன் பிரபாத் முனிபுர அவர்கள் கட்டளை அதிகாரி மற்றும் ஏனைய பணிநிலை அதிகாரிகளுடன் கலந்து கொண்டதுடன், பாடநெறியில் கலந்து கொண்ட 277 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.