Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd May 2024 18:02:45 Hours

அம்பாறையில் அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் சிரேஷ்ட தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி நிறைவு

அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் சிரேஷ்ட தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி – 51 மற்றும் 56' வெற்றிகரமாக முடிவடைந்ததுடன் சான்றிதழ் வழங்கும் விழா 21 மே 2024 அன்று நடைபெற்றது.

இராணுவத்தின் பல்வேறு படையணிகளை சேர்ந்த 53 சிரேஷ்ட அதிகாரவணையற்ற அதிகாரிகள் மற்றும் 83 அதிகாரவணையற்ற அதிகாரிகள் அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் ஒரு மாத கால பாடநெறியினை பின்பற்றினர். விஷேட படையணியின் பணிநிலை சார்ஜன் ஆர்எஸ்என் ரணதுங்க ஆர்எஸ்பீ யுஎஸ்பீ சிரேஷ்ட அதிகாரவணையற்ற அதிகாரிகள் பாடநெறி-51ல் சிறந்த மாணவராக விருது பெற்றார். இலங்கை பீரங்கிப் படையணியின் பொம்படியர் டி.பீ பீரிஸ் அதிகாரவணையற்ற அதிகாரிகள் பாடநெறி -56 இல் சிறந்த மாணவராக விருது பெற்றார்.

பாடநெறியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியதன் பின்னர் நிறைவுரையை அம்பாறை போர் பயிற்சி பாடசாலை கட்டளை அதிகாரி கேணல் எம்கேஏடி சந்திரமால் அவர்கள் வழங்கினார். விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.