Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th April 2023 22:35:22 Hours

அமைதி ஆதரவு நடவடிக்கைகளுக்கான இலங்கை பயிற்சி நிறுவனத்தின் சிவில் ஊழியர்களின் சேவைக்கு பாராட்டு

அமைதி ஆதரவு நடவடிக்கைகளுக்கான இலங்கை பயிற்சி நிறுவனத்தில் பணிபுரியும் சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கும் நிகழ்வு அமைதி ஆதரவு நடவடிக்கைகளுக்கான இலங்கை பயிற்சி நிறுவனத்தில் ஏப்ரல் 10 ஆம் திகதி வழங்கப்பட்டது.

இத் தி்ட்டமானது அமைதி ஆதரவு நடவடிக்கைகளுக்கான இலங்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி பிரிகேடியர் சி ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது. பண்டிகை காலத்தில் இந்தத் திட்டம் பொருளாதார நெருக்கடிகளைத் தணிக்கவும், இராணுவத்திற்கான அவர்களின் சேவையைப் பாராட்டவும் அமையபெற்றது.

பிரிகேடியர் சி. ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விநியோக நிகழ்வை சிறப்பித்தார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.