11th July 2021 18:13:02 Hours
அமெரிக்க டெக்ஸாஸ் தடகள போட்டிகளில் பங்குபற்றிய இலங்கை இராணுவ வீரரான உஷான் திவங்க அண்மையில் உயரம் பாய்தல் போட்டியில் 2.30 மீற்றர் என்ற புதிய சாதனையை நிலைநாட்டினார்.
தற்போது, அவர் ஒலிம்பிக் போட்டிகளிலிலும் பிரகாசிப்பதற்காக அமெரிக்காவில் பயிற்சி பெற்று வருகிறார்.
அவரது திறமைகளை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவரது எதிர்கால வெற்றிக்கு ஊக்குவிப்பு தொகையை வழங்கினார். இராணுவ தடகளக் குழுவின் தலைவரும், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மேற்படி அன்பளிப்பு வழங்கி வைக்கப்பட்டது.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியான இராணுவ தளபதியால் இரண்டாவது தடவையாக இவ்வாறு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.