29th August 2023 22:23:41 Hours
பிரிகேடியர் ஏஎஸ்பீ ஜயம்பதி யுஎஸ்பீ அனுராதபுரத்திலுள்ள 'அபிமன்சல 1' நல விடுதியின் புதிய தளபதியாக புதன்கிழமை (ஓகஸ்ட் 23) மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
வருகை தந்த தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கிய பின்னர், சிரேஷ்ட அதிகாரிகளால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் கடமையை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக, உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். அதனைத் தொடர்ந்து, புதிய தளபதி, வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு, குறித்த நல விடுதியில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் போர்வீரர்களின் நலம் விசாரித்தார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.