11th May 2023 19:10:47 Hours
போயா தினத்தன்று (மே 5) வெசாக் பண்டிகையை முன்னிட்டு பங்கொல்லை 'அபிமன்சல - 3' ஆரோக்கிய விடுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி போர்வீரர்கள் சிறப்பு 'போதி பூஜை' மற்றும் அரநெறி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிரந்தரமாக காயமடைந்த போர் வீரர்களுக்கு ஆன்மிக நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை நடத்துவது குறித்து ‘அபிமான்சல 3’ நல விடுதியின் தளபதி பிரிகேடியர் பீகேஜிசி பாஸ்குவேல் அவர்கள் பரிந்துரைத்தார்.
வண. கொட்டுகொட புத்தரக்கித்த தேரர் நிகழ்ச்சியை நடாத்தியதுடன், வீரமரணம் அடைந்த போர்வீரர்களுக்கான சிறப்பு பிராத்தனையும், சேவையாற்றும் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆசிகளையும் வழங்கினார்.
மேலும், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் அங்கு வசிப்பவர்கள் ஆரோக்கிய விடுதி ஊழியர்களுடன் இணைந்து வண்ணமயமான வெசாக் கூடுகள் மற்றும் பாரம்பரிய அம்சங்களால் வளாகத்தை அலங்கரித்தனர்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் மற்றுதிறனாளிகள் கலந்துகொண்டனர்.