28th April 2023 19:25:22 Hours
அனுராதபுரம் 'அபிமன்சல-1' நல விடுதிக்கு புத்தாண்டு உற்சாகத்தை கொண்டு வரும் வகையில், இராணுவ தலைமையகத்தின் புனர்வாழ்வு பணிப்பகம், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இசை நிகழ்ச்சி மற்றும் மென்பந்து கிரிக்கெட் போட்டிகளை 'அபிமன்சல-1 இல் 18 ஏப்ரல் 2023 அன்று நடாத்தியது.
'அபிமன்சல-1' இன் தளபதி பிரிகேடியர் டிஎம்கே சக்கரவர்த்தி ஆர்எஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக நலன்புரி விடுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி போர்வீரர்களுடன் கலந்துகொண்டார்.
போர்வீரர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வு இசை நிகழ்வுடன் நிறைவுற்றது.