Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

அபிமன்சலயில் இடம்பெற்ற செஸ் போட்டி

படையணிகளுக்கிடையிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது விசேட தேவையுடைய போர் வீரர்களுக்காக பங்கொல்லா “அபிமன்சல 3” யில் கடந்த (03) ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றன. இப்போட்டி நிகழ்விற்கு இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள், இராணுவ செஸ் கழகத்தின் பிரிகேடியர் G.M.C.K.B ஏகநாயக்க அவர்களின் அழைப்பின் பேரில் பிரதான அதிதியாக கலந்துகொண்டார். மேலும் தியதலாவையின் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இப் போட்டியானது சாம்பியன்ஷிப் தனிநபர் மற்றும் குழு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது. இப் போட்டியில் அபிமன்சல 2, அபிமன்சல 3 மற்றும் ராகம ரணவிரு சேவன போன்ற இடங்களில் இருந்து 18 க்கும் மேற்பட்ட போர் வீராங்கள் போட்டியிட்டனர். இப் போட்டியில் ராகம - ரணவிரு சேவன வீரர்கள் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றினர். மேலும் அபிமன்சல 2 மற்றும் 3 இடங்களில் உள்ள வீரர்கள் 2 மற்றும் 3 ஆவது இடத்தை கைப்பற்றின. இந்த தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டியில், 18 வீரர்களுக்கு எதிராக போட்டியிட்டு அபிமன்சல 3 இன் கோப்ரல் ஈ.ஏ.ஏ.என் எதிரிசிங்க முதல் இடத்தை பெற்று வெற்றி பெற்றார். Adidas footwear | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!