Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th June 2020 12:04:48 Hours

அனைத்து படையினருக்குமான புதிய பழச்சாறு பகுதி இராணுவ சிற்றூண்டியில் திறந்து வைப்பு

ஶ்ரீ ஜயவர்தனபுரையில் அமைந்துள்ள இராணுவத் தலைவமையகத்தில் சேவைபுரியும் அனைத்து படையினரின் ஊட்டச்சத்துக்களின் அளவினை அதிகரிக்கும் நோக்கில், பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் திட்டத்திற்கமைவாக இலங்கை இராணுவ சேவா வணிதா பிரிவினால் இராணுவத் தலைமையகத்தில் உள்ள பிரதான சிற்றூண்டியில் வெவ்வேறான பழச்சாறு பகுதி பகுதியானது அமைக்கப்பட்டு வியாழக்கிழமை 11 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

படையினருக்கு இயற்கை ஊட்டச்சத்தினை அளிக்கக்கூடியதும் நியாயமான விலையில் வழங்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட குறித்த பழச்சாறு பகுதியினை, இராணுவ சேவா வணிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவ நெல்சன் அவர்கள் அதனை திறந்து வைத்தார்.

விவசாய பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஐ.பி கந்தனஆராச்சி ,கேணல் ஒருங்கிணைப்பு அதிகாரி கேணல் டி.எஸ் பாலசூரிய ,கேணல் நிருவாகம் கேணல் டபல்யு.எம்.ஏ.பி விஜேகோண் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். best Running shoes brand | Sneakers