Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th December 2021 07:00:18 Hours

அனைத்து இராணுவ முகாம்களையும் உள்ளடக்கி 100,000 தென்னங்கன்றுகள் நடுகை

இலங்கை இராணுவத்தின் விவசாயம் மற்றும் கால்நடைகள் பணிப்பகத்தினால், அரசாங்கத்தின் பசுமைப் பயிர்ச்செய்கைத் திட்டத்தை வலுப்படுத்து வகையில் இராணுவ தளபதியவர்களின் “துரு மித்துரு நவ ரட்டக்” திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து இராணுவ முகாம்களையும் உள்ளடக்கி 100,000 மரக்கன்றுகளை நாட்டிவைக்கும் திட்டம் தெங்கு பயிர் செய்கை சபையுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.

இத்திட்டத்தினூடாக எதிர்பார்க்கப்படும் இலக்கை அடைந்துகொள்ளும் நோக்கில் கந்தாகாடு பகுதியில் இராணுவத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற பண்ணையில் 10,000 தென்னங் கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டதிடன் வியாழன் (16) இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை தென்னை பயிர் செய்கை சபையின் பணிப்பாளர் திருமதி ஏ.வி.கே மாதவி ஹேரத் மற்றும் இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் ஏ.கே.ராஜபக்ஷ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.