12th April 2021 21:27:54 Hours
தலைமை சமிஞ்சை அதிகாரி அலுவலகம் மற்றும் ரணவீரு தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (RITTI) இணைந்து இராணுவத்தின் அனைவருக்கும் ஓய்வூதிய வயதை எட்டுவதற்கு முன்பதாக தகவல் தொழிநுட்பத்தில் தேசிய தொழிற் பயிற்சி தரம் 3 பெற்றுக் கொள்ளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
அதன்படி பல்வேறு படையணிகளைச் சேர்ந்த 28 இராணுவ வீரர்களுக்கு தங்களது ஓய்வு காலப்பகுதியில் பயனளிக்கும் வகையில் தகவல் தொழிநுட்ப பயிற்சியளிக்கப்பட்டது. இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பனாகொடையில் இடம்பெற்றதுடன் அதன் பிரதம விருந்தினராக இலங்கை இராணுவ பிரதம சமிஞ்சை அதிகாரி மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ் கலந்துக் கொண்டார். அங்கு உரையாற்றிய பிரதம சமிஞ்சை அதிகாரி இந்த தொழிநுடப யுகத்தில் தகவல் தொழிநுட்ப கற்கையின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்கள் தொடர்பாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியின் போது ரணவீரு தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் பயிற்சிப் பணிப்பாளர் லெப்டினன்ட் கேணல் ஆர்.சி விஜயகோன் மற்றும் 11 வது சமிஞ்சைப் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் எஸ்.டி. கொத்தலாவல ஆகியோரும் பங்குபற்றினர். latest Running Sneakers | New Releases Nike