31st December 2021 20:00:39 Hours
கொழும்பு 8, டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் ஆசிரியை திருமதி ஆஷா உபேந்திரனி அவர்களின் அனுசரணையின் பேரில், 59 வது படைப் பிரிவின் கீழ் உள்ள 591 வது பிரிகேட் படையினரால் முல்லைத்தீவில் உள்ள லதானி சிறுவர் இல்லத்தில் சனிக்கிழமை (25) நத்தார் கரோல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்தனர்.
இந்த நத்தார் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சூரியபண்டார அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 59 வது படைப் பிரிவின் தளபதியவர்களின் வழிகாட்டுதலின் கீழ் அனாதை குழந்தைகள் மற்றும் ஏனைய பங்கேற்பாளர்களை மகிழ்விக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டது . இந் நிகழ்வு 591 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுஜீவ பெரேரா அவர்களின் கண்காணிப்பின் சிறப்பாக இடம்பெற்றது என்பது குறிப்பிடதக்கதாகும்.
அதற்கமைய லதானி சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த சிறுவர்களால் நத்தார் கரோல் கீதங்கள் பாடப்பட்டன. இந் நிகழ்வின் அனுசரணையாளரான திருமதி உபேந்திரனி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் 24 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர், கட்டளை அதிகாரி மேஜர் என்.டி.சி.எஸ்.நல்லபெரும ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர். இந் நிகழ்வு சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி இடம் பெற்றன.