12th January 2020 08:09:53 Hours
புத்தளையில் அமைந்துள்ள அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையத்தில் பதிதாக அமைக்கப்பட்ட ‘நெக்ஸஸ் பிட்னஸ் ஹப்’ உடற்பயிற்சிக்கூடம் சமீபத்தில் திறந்துவைக்கப்பட்டது.
அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த ஜயவீர அவர்களால் இப்புதிய உடற்பயிற்சிக்கூடம் திறந்துவைக்கப்பட்டு சம்பிரதாய முறைப்படி மங்கள விளக்கேற்றப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதி கட்டளை தளபதி, தலைமை பயிற்றுவிப்பாளர், கட்டளை தளபதிகள், சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் படையினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
புதிய அதிநவீன உடற்பயிற்சிக்கூடத்திற்கு புதிய , உடல் வடிவமைத்தல் மற்றும் தசை பராமரிப்பு கருவிகள் மற்றும் பிற பாகங்கள் உள்ள இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய உடற்பயிற்சி கூடத்தினால் அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையத்தின் அனைத்து அதிகாரிகளுக்கும் படையினர்களுக்கும் அவர்கள் வளாகத்தில் வசிப்பதால் அவர்களின் உடல் ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ள உதவுகிறது என்பது குறிப்பிடதக்க விடயமாகும். Nike air jordan Sneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov