10th December 2021 12:30:05 Hours
தொம்பகொடவிலுள்ள உபகரண பாடசாலையில் நடத்தப்பட்டு வந்த படையணி குவாட்டமாஸ்டர் பாடநெறி எண் 68 மற்றும் வெடிபொருள் களஞ்சியபடுத்துனர் பாடநெறி எண் – 50 என்பன 2021 டிசம்பர் 09 ஆம் திகதி நிறைவடைந்துள்ளன. இலங்கை இராணுவ போர்க்கருவி படையணியின் தளபதியும் போர்கருவி சேவை பணிப்பக பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் எம்.பி வீரசிங்க அவர்கள் இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.
மேற்படி இரண்டு பாடநெறிகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை இராணுவத்தின் பல்வேறு படையணிகளைச் சேர்ந்த 50 சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் 44 படையினர் அடங்கிய குழுவினர் பிரதம அதிதியிடமிருந்து தங்களுக்கான சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர். இதன்போது இராணு போர்கருவிகள் படையணியின் தளபதியவர்கள் லெப்டினன் கேணல் ஜீ.டி.எஸ் சில்வா அவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டது.
4 வது இலங்கை மின்னியல் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் பதவி நிலை சார்ஜென் ஆர்எல்சிடபிள்யூ சுரேந்திர படையணி குவாட்டமாஸ்டர் பாடநெறி எண் - 68 இன் சிறந்த மாணவராகவும், 5 வது பொறியாலாளர் சேவை படையணியின் சிப்பாய் டிஎம்எம்பி சம்பத் வெடிபொருள் களஞ்சியபடுத்துனர் பாடநெறி எண் – 50 இன் சிறந்த மாணவராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் பதவி நிலை அதிகாரி 1 (விணி) – இராணுவ போர்க் கருவிகள் சேவை படையணி தலைமையகம், உபகரண பாடசாலை பயிற்றுவிப்பாளர், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.