07th November 2023 05:37:04 Hours
அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் தலைமைத்துவம் மற்றும் தொழிலான்மை அபிவிருத்தி பாடநெறி - 52 சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நவம்பர் 4 ஆம் திகதி அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் போர் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இராணுவத்தில் உள்ள பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 93 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் ஒரு மாத காலப் பயிற்சியைப் பின்பற்றியதுடன், 5 வது இலங்கை இராணுவ கவச வாகனப் படையணியின் லான்ஸ் கோப்ரல் எச்.பி.எஸ்.எம் வீரகோன் அவர்கள் பாடநெறியில் சிறந்த மாணவருக்கான சான்றிதழை பெற்றுகொண்டார்.
இந்த பரிசளிப்பு விழாவில் போர் பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி கேணல் எம்.கே.ஏ.டி சந்திரமால், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.