Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st January 2020 14:06:46 Hours

அக்கராயன்குளம் கோவில் வளாகத்தில் படையினரால் வேப்ப மர கன்று நடுகை

கிளிநொச்சி அக்கராயன்குளம் இந்து கோவில் வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வேப்ப மர (மாகோசா) மரக்கன்றுகளை நடும் திட்டம் 652 ஆவது படைப் பிரிவின் படையினரால் இம் மாதம் 27 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.

இந்த திட்டமானது பதில் பாதுகாப்பு பிரதாணியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் எண்ணகருவிற்கமைய “துரு மித்துரு” - நவ ரடக்” எனும் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கமைய, இந்த திட்டமானது அக்கராயன்குளத்தில் உள்ள பிள்ளையர் இந்து கோவிலில் ஆரம்பிக்கப்பட்டதுடன், திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 7 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால் ஜனவரி 27 ஆம் திகதி 17 இந்து கோவில் வளாகங்களில் 100 க்கும் மேற்பட்ட வேப்ப மரக் கன்றுகள் நடப்பட்டன, இந்த திட்டமானது 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் டி.எம்.எச்.டி பண்டார அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் அக்கராயன்குளத்தில் உள்ள பிள்ளையர் இந்து கோவிலின் பிரதான குருக்கல், அக்காராயங்குள மருத்துவமனையின் மாவட்ட மருத்துவ அதிகாரி 652 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி கேணல் டபில்யு.எல.ஏ.பெரேரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த திட்டம், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களின் ஆசீர்வாதத்துடன் பொதுமக்களை மேம்படுத்துவதற்காகவும், உறவுகள் மற்றும் பொதுவான புரிதல் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்ளவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிட தக்க விடயமாகும். Sports brands | GOLF NIKE SHOES