இலங்கை பொறியியல் படையணிகளுக்கிடையிலான தடகளப் போட்டி – 2026 இல் நிறைவு விழாவில் இராணுவ பதவி நிலைப் பிரதானி பங்கேற்பு

இலங்கை பொறியியல் படையணிகளுக்கு இடையிலான தடகளப் போட்டி – 2026, தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் 2026 மார்ச் 08 ஆம் திகதி நடைபெற்றது. நிறைவு விழாவில் இராணுவத் பதவி நிலை பிரதானியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே.தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நாள் முழுவதுமாக நடைபெற்ற பல்வேறு வகையான தடகள மற்றும் களப் போட்டிகளில் விளையாட்டு வீரர்கள் ஆர்வத்துடன் போட்டியிட்டதுடன் குறிப்பிடத்தக்க வேகம், சகிப்புத்தன்மை, வலிமை மற்றும் உறுதியை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வின் போது, வெற்றி பெற்ற அணிகள் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அவர்களின் செயற்திறன் மற்றும் போட்டியின் போது குறிப்பிடத்தக்க சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக கிண்ணங்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த நிகழ்வில் இராணுவ செயலாளரும் இராணுவ தடகளக் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் பீ.ஜி.எஸ். பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ, பிரதம களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் சி.டி. விக்ரமநாயக்க டபிள்யூவீ ஆர்எஸ்பீ என்டிசீ, விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கே.ஏ.டி.சீ.ஆர். கன்னங்கர ஆர்எஸ்பீ என்டிசீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.