9th March 2026
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் கம்புருபிட்டிய 12 வது (தொண்டர்) பொறியியல் சேவைகள் படையணி மற்றும் மாத்தறை 3 வது (தொண்டர்) கெமுனு ஹேவா படையணி ஆகியவற்றிற்கு 2026 மார்ச் 06 ஆம் திகதி உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயம், படையலகுகளின் செயற்பாட்டு மற்றும் நிர்வாக செயற்திறனை மதிப்பாய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
அந்தந்த படையலகுகளுக்கு வருகை தந்த இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதிக்கு படையினர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் வாகனம் தொடரணிக்கு மரியாதை வழங்கி வரவேற்றனர். பின்னர், 12 வது (தொண்டர்) பொறியியல் சேவைகள் படையணி மற்றும் 3 வது (தொண்டர்) கெமுனு ஹேவா படையணி ஆகியவற்றின் கட்டளை அதிகாரிகள், தற்போதைய செயற்பாட்டு நடவடிக்கைகள், எதிர்கால திட்டங்கள் மற்றும் எதிர்கால எதிர்பார்ப்புகள் குறித்து இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதிக்கு விளக்கமளித்தனர்.
படையினருக்கு உரையாற்றிய இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி, ஒரு சிப்பாயின் தொழிற்துறை சிறப்பின் அடிப்படை அங்கமாக சுய விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இராணுவ கடமைகள் மற்றும் சிவில் ஈடுபாடுகள் இரண்டிலும் உகந்த செயற்திறனை அடைவதற்கு அனைத்து நிலையினரும் தங்கள் அடையாளம், பணி, நோக்கம் மற்றும் குறிப்பிட்ட நோக்கங்களை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் ஊக்குவித்தார்.
விஜயத்தின் நிறைவாக, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி, 12 வது (தொண்டர்) பொறியியல் சேவைகள் படையணி வளாகத்தில் ஒரு மரக்கன்றை நட்டு, அந்தந்த படையலகுகளின் விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் தனது பாராட்டுகளைப் பதிவிட்டார்.
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் முதன்மை பணிநிலை அதிகாரி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த விஜயத்தின் போது கலந்து கொண்டனர்.