13th March 2026
தென் சூடான் ஐநா அமைதி காக்கும் பணியின் நிலை-2 வைத்தியசாலையில் பணியாற்ற இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் 12வது குழு 2026 மார்ச் 13 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டது.
இந்தக் குழுவிற்கு இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படைத் தளபதி டி.ஆர்.எஸ்.ஏ. ஜயமாண்ண ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் தலைமை தாங்குகின்றார். மேலும் மேஜர் எச்.பீ.டி. கல்கொடெல்ல யூஎஸ்பீ அவர்கள் இரண்டாம் கட்டளை அதிகாரியாக பணியாற்றுகிறார். இந்தப் படையணியில் 13 இராணுவ அதிகாரிகள் மற்றும் 50 சிப்பாய்கள் உட்பட 63 பேர் உள்ளனர். சர்வதேச அமைதி காத்தல் மற்றும் மனிதாபிமான உதவிக்கான இலங்கையின் உறுதிப்பாடு அவர்களின் பணியமர்த்தலில் தொடர்கிறது.
அவர்கள் புறப்படுவதற்கு முன்பு, 2026 பெப்ரவரி 10 ஆம் திகதி வேரஹெர இலங்கை இராணுவ மருத்துவப் படையணி தலைமையகத்தில் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுக்கு படையினர் சம்பிரதாய மரியாதை அளித்தனர்.
வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்.பீ. விக்ரமசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விமான நிலையத்தில் கலந்து கொண்டு, முன்னோக்கிச் செல்லும் பணிக்கு தங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கினர்.